சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் – 14 மாட்டு வண்டிகள் பங்கேற்பு சிவகங்கை -திருப்பத்தூர் சாலையில் நகரம்பட்டி விலக்கு ரோட்டில் காளையார்கோவில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 4 மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 9 மாட்டு வண்டிகளும் பங்கேற்றது .

பெரிய மாட்டு வண்டி பந்தயத்தை வடக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி துவக்கி வைத்தார் அதேபோல் சின்ன மாட்டு வண்டி பந்தயத்தை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன் துவக்கி வைத்தார். இப்பந்தயம் வீழநேரியிலிருந்து ஒக்கூர் வரை 8 கிமீ, 6 கி.மி தூரம் எல்லை நிர்ணயித்து போட்டிகள் நடைபெற்றது.

இதில் சிவகங்கை மாவட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பந்தய மாட்டுவண்டிகள் 14 பங்கேற்றது. வீழநேரி, மதகுபட்டி நகரம்பட்டி ஒக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டி பந்தய ஆர்வலர்கள் சாலையின் இரு புரங்களிலும் திரண்டு நின்று உற்சாகமாக கண்டுகளித்தனர். பந்தயத்தின் முன்னும் பின்னும் ஏராளமானோர் இருசக்கர வாகனத்தில் சென்றவாறு மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு களித்தனர்.மதகுப்பட்டி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்