ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பொள்ளாச்சிக்கு தேங்காய் மட்டை ஏற்றிக்கொண்டு ஈச்சர் வாகனம் ஒன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது,
வாகனத்தை திண்டுக்கல் மாவட்டம் தெத்துபட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் ஒட்டி வந்தார், உடன் மற்றோரு ஓட்டுநர் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த கோகுல்நாத் (31) வந்துள்ளார்,
வாகனம் வரட்டு பள்ளம் அணை வியூ பாயிண்ட் பகுதியில் உள்ள வளைவில் திரும்பும்போது பிரேக் பிடிக்காமல் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது,
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக வாகனத்தை ஒட்டி வந்த மணிகண்டன் மற்றும் உடன் வந்த மற்றொரு ஓட்டுனர் கோகுல்நாத் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர்த்தபினர், தொடர்ந்து அவர்கள் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

