தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியார், வால்பாறை, டாப்ஸ்லிப், உள்ளிட்ட இடங்கள் உள்ளன.இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதுண்டு.
தற்போது தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஆழியார், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.
இதற்கிடையே ஆழியார் – வால்பாறை சாலையில் ஒற்றைக் காட்டு யானை இன்று காலை கடந்து சென்றது.இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் ஆங்காங்கே பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டது.
காலை நேரம் போக்குவரத்து உள்ள ஆழியார் – வால்பாறை சாலையில் யானை உலா வந்த போது பணியில் இருந்த வன அதிகாரி யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்பினார்.
இவ்வழியாக வரும் சுற்றுலா பயணிகள் சாலையில் யானைகளைப் பார்த்தால் செல்பி மற்றும் புகைப்படம் எடுக்கவோ, வாகனங்களை நிறுத்துவோ கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
