கன்னியாகுமரிகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை நின்றுள்ளதால் காளிகேசம் வன சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல விதிக்கப்பட்ட தடையை இன்று முதல் மாவட்ட வனத்துறை நீக்கியுள்ளது. இதனை தொடர்ந்து இன்று காளிகேசம் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.