திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை
ரயில்வே கோடூர் துணைக் கட்டுப்பாட்டு ஆர்.ஐ கிருபானந்தா மற்றும் எஃப்.பி.ஓ சுப்பலட்சுமி ஆகியோரின் குழு அன்னமய்யா மாவட்டத்தின் பாலப்பள்ளி வனப்பகுதியில் தேஷெட்டிப்பள்ளியில் இருந்து ரோந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் இரண்டு கார்களுடன் காணப்பட்டனர். அதிரடிப் படை போலீசார் அவர்களை சுற்றி வளைக்க முயன்றபோது தப்பி ஓட முயன்றனர். இதில் அதிரடிப் படை போலீசார் 9 பேரைப் பிடித்தனர். அவர்கள் கர்நாடகா மாநிலம் மற்றும் ஆந்திராவில் நந்தியால் மற்றும் அன்னமய்யா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்தது. வாகனத்தில் கடத்தலுக்காக வைத்திருந்த 16 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களை திருப்பதி அதிரடிப்படை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று டிஎஸ்பிக்கள் வி. ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் ஷெரீப் ஆகியோர் விசாரித்து எஸ்.ஐ. ரஃபி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.