தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட செயலாளர் கோபால் தலைமை தாங்கினார்

ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்வதற்கு லஞ்சமாக பணம் பெற்று முறைகேடு செய்வதாக புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும்

ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக ஏராளமான அளவிற்கு கொள்ளை நடைபெறுவதாக புகார் கூறியும் அதற்கு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும்

அதற்குரிய புகார்களை கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தும் ஆண்டிபட்டி வருவாய்துறையினரை கண்டித்தும்

ஆண்டிபட்டி தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும்

விவசாயிகளின் நிலத்தை சர்வே செய்ய ஆண்டிபட்டி வரவாய்துறையினர் மற்றும் சர்வே துறையினர் ஆயிரக்கணக்கில் கட்டாய லஞ்சம் பெறுவதை கண்டித்தும்
கோசங்கள் எழுப்பப்பட்டன

ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்