கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசீய நெடுஞ்சாலையில் பரந்தாலுமூடு பகுதியில் சாலையோரம் நின்ற ராட்சஸ மாமரம் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்து போக்கு வரத்து பாதிப்பு.

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசீய நெடுஞ்சாலையில் பரந்தாலுமூடு பகுதியில் சாலையோரம் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மாமரம் ஒன்று அதன் மூடு பகுதி இற்று ஆபத்தான நிலையில் நின்று கொண்டு இருந்தது. இந்நிலையில் இன்று அந்த ராட்சஸ மாமரம் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.நல்வாய்ப்பாக அந்நேரம் வாகனங்கள் எதுவும் கடந்து செல்லாததாலும் ஆட்கள் கடந்து செல்லாததாலும் உயிர் சேதம் தவிர்ப்பு.
ஆனால் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரி சேதம் அடைந்தது. அந்த லாரியில் ஓட்டுநர் இருக்கையில் ஓட்டுநர் ஒருவர் தூங்கி கொண்டிருந்தார். அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும் உயர் மின் அழுத்த கம்பியின் மீது விழுந்ததால் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின் விநியோகம் தடை பட்டது

தகவல் அறிந்த குழித்துறை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களோடு இணைந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் களியக்காவிளை நாகர்கோவில் தேசீய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.