வேலூர், காட்பாடி மிஷின் காம்பவுண்ட் வள்ளிமலை சாலையை சேர்ந்தவர் ஆதியம்மாள் (104) இவருக்கு மகன் மகள்கள் என 9 பேர் மூதாட்டிக்கு பேரன் பேத்திகள் என மொத்தம் 40 பேர் உள்ளனர். இவர்களின் உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 100 வயதை தாண்டியதால் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு செய்து காலையில் மக்களுக்கு இலவச மருத்துவ முகாமினை நடத்தி பின்னர் மாலை அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஆதியம்மாளை அமர வைத்து காட்பாடி பகுதியில் முக்கிய வீதிகளின் வழியாக பேரன் பேத்திகள் உறவினர்களும் நடனமாடிய வண்ணம் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் அங்குள்ள திடலில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது அங்கு கேக் வெட்டி பேரன் பேத்தி அனைவருடனும் 104 வயதை கொண்டாடினார்
