அதிமுக.வினர் ஆர்பாட்டத்திற்கு வந்த 6 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து..

அதிமுக முன்னாள் அமைச்சர் கார் மற்றும் அவரது பின் தொடர்ந்து வந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே நடைபெற்ற இரட்டைக் கொலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தியும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் கே வி. ராமலிங்கம் தனது காரில் வந்து கொண்டிருந்தார்
அவரை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்காக முன்னாள் அமைச்சர் ராமலிங்கத்துடன் சுமார் 20க்கும் மேற்பட்ட கார்கள் பின் தொடர்ந்து வந்தன.
விளக்கேத்தி அருகே வந்த போது, முன்னாள் அமைச்சர் வாகனத்திற்கு முன் சென்ற கார் நிலைத்தடு மாறியதில் தொடர்ந்து அடுத்தடுத்து 6 கார்கள் ஒன்றின் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், காரின் முன், பின் பகுதிகள் சேதமடைந்தன.
முன்னாள் அமைச்சர் கே வி ராமலிங்கம் கார் உட்பட 6 கார்கள் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.