சேலம் கருப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குள்ளகவுண்டனூர் பகுதியை சேர்ந்த சத்யபிரியா என்பவருக்கு கொலை மிரட்டல் இருப்பதாக கருப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் சந்தித்து மனு கொடுத்துவிட்டு வந்துள்ளனர். பின்னர் மாநகர காவல் உதவி ஆணையர் சந்தித்து மனு கொடுக்க சென்று கொண்டிருந்தபோது, சத்யபிரியா மற்றும் அவரது சகோதரர் சுதர்சன் ஆகிய இருவர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சத்யபிரியாவின் கணவர் வினோத்குமார் மற்றும் அவரது மாமனார் ராமன் ஆகிய இருவரும் சேர்ந்து சத்யபிரியா சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். அப்போது சுதர்சன் வாகனத்தை சுதாரித்து ஓரங்கட்டிய பிறகு வினோத்குமாரும் அவரது தந்தை ராமன் இருவரும் காரை விட்டு இறங்கியவுடன் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து விட்டு வரும் வழியில் நடந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பதிவிட்டுள்ளனர்.
சேலத்தில் காவல் நிலையம் சென்று புகார் அளித்துவிட்டு திரும்பியவர்களை, அவரது உறவினர்களே சாலையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
