மதுரை மாவட்டத்தை சேர்ந்த நாகலிங்கம் (60) என்பவர் திருப்பூர் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி பெயிண்டிங் கூலி வேலை செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல மூன்று பேருடன் சேர்ந்து ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள பிஜாஸ் எனும் தனியார் சாயசலவை ஆலையில் பெயிண்டிங் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு பணியின் போது சாய கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். உடன் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த திருப்பூர் தெற்கு இணைப்பு துறையினர் கழிவுநீர் தொட்டியில் இருந்து உடலை மீட்டனர். திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ‌