சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மல்லிகரை வடக்கு ரங்கப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மோகனப்பிரியா (34) என்பவர் தனது கணவர் ரகுராமன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் அயோத்தியா பட்டணத்தில் உள்ள தனது தம்பி மனைவி வளைகாப்புக்கு சென்று விட்டு கடந்த 2-02-2025 அன்று வீடு திரும்பி கொண்டிருக்கும்போது சேசன்சாவடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மர்ம நபர்கள் இருவர் பைக்கை வழிமறித்து கழுத்தில் இருந்த ஏழு சவரன் தங்க நகையை பறித்துச் சென்றது இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில் பாண்டிச்சேரியில் மத்திய சிறையில் கைதான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆமோஸ் பெர்னாண்டர்ஸ் (26) அங்கு கொடுத்த வாக்குமூலத்தின் வாழப்பாடி பெண்மணியிடம் 7 சவரன் தங்க செயின் பறித்து சென்றது குறித்த கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வாழப்பாடி போலீசார் அங்கு சென்று நீதிமன்ற அனுமதியுடன் பாண்டிச்சேரி சிறையில் இருந்து அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
