கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பசுமை எரிசக்தி மற்றும் நிலைத்த ஆற்றல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்ற நிகழ்ச்சியில் 1608- பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்புகளை கையில் ஏந்தி இந்தியா வரைபடம் போல் நின்று சாதனை முயற்சி சாதனையை அங்கீகரித்து இந்தியா புக் ஆப் ரெக்காட்ஸ் நிறுவனம் சான்றிதழ்களையும் வழங்கியது.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில் குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி மற்றும் பசுமை எரிசக்தி குறித்த விழிப்புணர்வு கண்காட்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாணவர்கள் சொந்த முயற்சியில் உருவாக்கிய பசுமை எரிசக்தி மற்றும் நிலைத்த ஆற்றல் குறித்த படைப்புகளை கண்டு ரசித்தார்.
பின்னர் பள்ளியில் பயிலும் 1608-மாணவர்கள் தங்கள் படைப்புகளை கையில் ஏந்தி இந்தியா வரைபட வடிவில் நின்று அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர் மாணவர்களின் இந்த சாதனையை அங்கீகரித்து இந்தியன் புக் ஆப் ரெக்காட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியது.

#ChildrensDayCelebration#GreenEnergyAwareness#IndianBookOfRecords#Kanyakumari#SustainableEnergy#CBSESchool#GeethaJeevan#StudentInnovation#EcoFriendlyFuture#Manavalakurichi