திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் புதியதாக திறக்கப்படும் அரசு மருத்துவமனைகளில் புதிய பணியிடங்கள் நிரப்பப்படாமல், ஏற்கனவே பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இடமாற்றம் செய்து பணியாற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை நோயாளிகளின் சிகிச்சை தரத்தை பாதிக்கும் என்று எச்சரித்த அவர்கள், ஜே.ஆர் மறுசீரமைப்பை அரசு கைவிட வேண்டும், புதிய மருத்துவமனைகளுக்கு தனித்த நியமனம் செய்ய வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் அரசு மருத்துவர்கள் ஏராளமானோர் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை எழுப்பினர்
#Tiruppur #DoctorsProtest #GovernmentDoctorsAssociation #MedicalCollege #TamilNaduHealth #JRReform #DoctorDemand #HealthcareStaffShortage #TiruppurNews #TamilNaduNews
