செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வரலாற்று சிறப்புமிக்க ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராமர் கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து வருகின்ற 21ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது

அதற்கான முதல் கட்டமாக இன்று கோயில் வளாகத்தில் புதியதாக செய்யப்பட்ட கொடிமரம் நடப்பட்டது இது சுமார் 20 லட்ச மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டு அமைச்சர் கே என் நேரு குடும்பத்தினர் தங்கள் குடும்ப உபயமாக இந்த கொடிமரம் வழங்கப்பட்டது

இன்று இந்த கோவில் கொடிமரம் நடும் விழாவில் நகர்ப்புற மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு பங்கேற்று சாமி தரிசனம் செய்து கொடி மரத்தை இன்று நட்டனர் அப்போது செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் இந்த கொடிமரம் எங்கள் குடும்பத்தின் சார்பாக உபயமாக 20 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நாங்கள் வழங்கிய கொடிமரம் என்று தெரிவித்தார் இந்தக் கோவில் சுமார் இரண்டரை கோடி மதிப்பீட்டில் பொறாமை செய்யப்பட்டு வரும் 21ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது இது முழுக்க முழுக்கநன்கொடையாளர்கள் நன்கொடையை கண்டு இந்த பணி நிறைவு பெற்று உள்ளது அறநிலையத்துறை சார்பில் எந்த நிதியும் வழங்கப்படவில்லை.
மேலும் மதுராந்தகம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்விக்கு அதற்கான ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் மதுராந்தகம் நகருக்குள் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்