திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா ஜோதிகா தம்பதியினர் மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோருடன் விஐபி தரிசனத்தில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தனர். சூர்யா ஜோதிகா தம்பதியினருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சாமி தரிசனம் செய்த பிறகு ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த சூர்யா ஜோதிகா தம்பதியினரை பார்த்த ரசிகர்கள் அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு செல்பி எடுத்துக் கொண்டனர். இதனால் கோயில் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா ஜோதிகா தம்பதியினர்
