கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து பில்லூர் அணைக்கட்டு பகுதிக்கு செல்வதற்கு சாலை போன்று உள்ளது வனப்பகுதிக்கு நடுவே இந்த சாலை அமைந்துள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும் அவ்வப்போது காட்டு யானைகள் இந்த சாலையை கடந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் குடிப்பதற்காக வருவது வழக்கம்
இந்த நிலையில் அரசு பேருந்து பயணிகளுடன் இந்த சாலையில் சென்றுள்ளது
முள்ளி
சோதனைச்சாவடியை தாண்டி பில்லூர் அணை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையை மறித்து இரு குட்டிகளுடன் கூடிய 6 யானைகள் பவானி ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்வதற்காக வந்துள்ளது அப்போது பேருந்தும் அதே வழியில் வந்த காரணத்தினால் பேருந்து தொடர்ந்து முன்னால் ஓட்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது
இதைத்தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் யானைகள் மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பிச் செல்லும் இடம் வரை பேருந்து பின்னோக்கி இயக்கி சென்றுள்ளார்
சுமார் ஐந்து நிமிடம் நடந்த யானைகள் மீண்டும் தங்கள் வந்த வழியில் திரும்பி காட்டுக்குள் சென்றுள்ளது இதைத் தொடர்ந்து பேருந்து மீண்டும் பில்லூர் அணையை நோக்கி இயக்கியுள்ளார் ஓட்டுநர் இதைத் தொடர்ந்து பேருந்து பயணம் செய்த பயணிகள் நிம்மதி அடைந்தனர்
இந்த காட்சிகள் அனைத்தையும் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
