ராமேஸ்வரம் அடுத்த கோதண்டராமர் கோயில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது
இந்த நிலையில் கோதண்ட ராமர் கோயில் அருகே உள்ள கடற்கரை பகுதியில் இலங்கைக்கு இராமர் செல்லும்போது கடல் நடுவே பால அமைத்து சென்றதாகும் அதற்கு பயன்படுத்திய தண்ணீரில் மிதக்கும் கல்லை வைத்து வழிபாட்டு தளம் அமைக்கப்பட்டுள்ளது அங்கு வரும் பக்தர்களிடம் ராமாயணக் கதைகளை கூறி மிதக்கும் கல்லின் அதிசயத்தையும் எடுத்துரைத்து வரக்கூடிய பக்தர்களிடம் ரூ.20 பணம் வசூல் செய்து சுமார் 85 ராம் சேது யாத்திரை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்
இந்த நிலையில் ராமநாதசாமி திருக்கோயிலில் இணை ஆணையர் செல்லதுரை கோதண்ட ராமர் கோயில் அருகே அமைக்கப்பட்ட வழிபாடு தளத்தில் வரக்கூடிய பக்தர்களிடம் பணம் வசூலிக்க கூடாது அதில் பணியாற்றுவார்கள் அங்கு சென்று பணியாற்றக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார்
இதனை எடுத்து ராம் சேது பணியாளர்கள் சுமார் 85 பேர் தங்கள் குடும்பங்களுடன் தனுஷ்கோடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
