சபரிமலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு நிறைப்புத்தறி பூஜை விமர்சையாக நடைபெற்றது

பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் விளைந்த புது நெல் அறுவடை செய்து தலை சுமையாக எடுத்து வந்து ஐயப்பனுக்கு படைத்து சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது இதன் பிறகு நெர் கதிர்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைக்கு பிறகு பிரசாதமாக வழங்கக்கூடிய இந்த நெர் கதிர்களை வீடுகளில் வைத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பதால் ஏராளமான பக்தர்கள் இந்த நெர்கதிர்களை பெற்றுச் சென்றனர்

ஆடி மாதம் நடைபெறும் நிறைப்புத்தரி பூஜைக்காக நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது இன்று இரவு ஹரிவராசனம் முடிந்து நடை அடைக்கப்பட உள்ளது.