ராமசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தை வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியதற்கான தொகையை முழுமையாக வழங்காததால் தொடரப்பட்ட வழக்கு.

1989ம் ஆண்டு 18 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட்ட நிலையில், இன்னும் ரூ.1 கோடியே 83 லட்சம் ரூபாய் தொகையை வீட்டு வசதி வாரியம் தர வேண்டும் என மனுதார்கள் தொடர்ந்த வழக்கு.

கோவை இரண்டாவது சார்பு கூடுதல் நீதிமன்றம் இந்த வழக்கில் ஜப்தி நடவடிக்கைக்கு தீர்ப்பு வழங்கியது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் நீதிமன்ற ஊழியர்கள் குழுவினருடனும் மனுதாரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை முடிந்த பின்னரே ஜப்தி செய்யப்படுகிறதா அல்லது இழப்பீடு தொகை வழங்கப்படுகிறதா என்பது குறித்து தெரியவரும்.