கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பெரும் பகுதி வனப்பரப்பு மிகுந்த பகுதியாகும். இங்கு சிறுத்தை, கரடி, யானை மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு உலா வருகிறது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பெண் கட மான ஒன்று வால்பாறை புதிய பேருந்து நிலையத்தை சுற்றி உலா வருகிறது. இவ்வாறு வரும் மான் பொதுமக்களிடையே எவ்விதி அச்சமஉணவர்வும் இன்றி உலா வருகிறது. மேலும் கடமானுக்கு உணவு கொடுத்தாலும் அதை செல்ல பிராணி உண்பது போல் அருகில் வந்து நின்று அசை போட்டு சாப்பிடுகிறது.
தினமும் வரும் கடமானை காண பொதுமக்கள் ஆர்வமுடன் காத்து உள்ளனர். மேலும் அவ்வழியே செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடமானை ரசிப்பதோடு கையில் வைத்திருக்கும் தின்பண்டங்களை அதற்கு அளித்து அதனுடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
வால்பாறை வனப்பகுதியில் இருந்து தொடர்ந்து வரும் கடமானால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் உலா வரும் கடமான்கள் பொதுமக்களிடம் சகஜமாக பழகி வருவதால் உள்ளூர் வாசிகள் அதற்கு தின்பண்டங்கள் வழங்கி செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்
