கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற வன பத்திரகாளியம்மன் அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் ஆடி குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறும் குண்டம் திருவிழா கடந்த 22 ஆம் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது அதனை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.முன்னதாக அதிகாலை பவானி ஆற்றில் இருந்து
பக்தர்கள் பூகரகங்கள் எடுத்து வர அம்மன் அழைப்பு நடைபெற்றது.
பின்னர் கோவில் பூசாரிகள் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து மூல ஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன பின்னர் கோவில் குண்டம் முன்பு சக்தி வேலுக்கு பால் அபிஷேகம் செய்தும் சிறப்பு பூஜைகள் செய்து தலைமை பூசாரி நவீன்குமார் முதலாவது குண்டம் இறங்கினார்.
அதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர் மேலும் பாதுகாப்பு பணிக்காக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவை திருப்பூர் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.