தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சிருஷ்டி டெஸ்ட் டியூப் பேபி மையத்தைப் பற்றி ஆன்லைனில் அறிந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் டாக்டர் நர்மதா தம்பதியை அணுகினர். இதற்கு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற ₹ .30 லட்சம் செலவாகும் என்று டாக்டர் நம்ரதா தம்பதியினரிடம் கூறினார். இதற்கு சம்மதம் தெரிவித்ததால் தம்பதியினர் விஜயவாடாவிற்கு அனுப்பி அங்கு செயற்கை கருவூட்டலுக்கு கருமுட்டை மற்றும் விந்தணு கொடுத்தனர். பின்னர் வாடகைத் தாய் கண்டுபிடிக்கப்பட்டதாக மருத்துவர் கூறினார்.
சில மாதங்களுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்ததாக டாக்டர் நம்ரதா தம்பதியினரிடம் கூறினார். குழந்தை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டதாக கூறி மேலும் ₹ 10 லட்சம் வசூலித்தனர். சில மாதங்களுக்குப் பிறகு குழந்தையில் தோற்றத்தில் தங்களுக்கு உண்டான ஒற்றுமை இல்லையென சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட்டது. இதனால் மருத்துவரிடம் டி.என்.ஏ பரிசோதனை செய்யச் சொன்னார்கள். இதற்கு டாக்டர் நம்ரதா ஏற்கவில்லை. இதனால், தம்பதியினர் டெல்லியில் டி.என்.ஏ பரிசோதனை செய்தனர் இதில் டி.என்.ஏ வேறு ஒருவருடையது என்று கண்டறியப்பட்டதால், டாக்டர் நம்ரதாவிடம் வந்து முறையிட்டனர். இதற்கு நம்ரதாவும் அவரது மகன் ஜெயந்தும் தம்பதியினரை மிரட்டினர். இதுகுறித்து தம்பதியினர் அளித்த புகாரின்படி வடக்கு மண்டல டிசிபி ரஷ்மி பெருமாள் தலைமையில் போலீசார் விசாரணை செய்தனர். இதில் டாக்டர் நம்ரதா டெல்லியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை விமானம் மூலம் விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்து அங்கு பிரசவம் பார்த்தார். அந்த பெண்ணுக்கு குழந்தை வேண்டாம் என்றதால் அந்த குழந்தையை ராஜஸ்தான் தம்பதிகளிடம் அவர்களிடம் கொடுத்துள்ளதும் குழந்தையை விரும்பாத பெண்ணுக்கு ₹ 90 ஆயிரம் பணத்தை கொடுத்து அனுப்பினார்.
ராஜஸ்தான் தம்பதி அளித்த புகாரின்படி டாக்டர் நம்ரதா உள்பட 8 பேரை நாங்கள் கைது செய்துள்ளோம். ஏழு பேரை சிறைக்கு அனுப்பியுள்ளோம். டாக்டர் நம்ரதா மீது ஆந்திரா, தெலங்கானா இரண்டு மாநிலங்களிலும் ஐவிஎஃப் தோல்வி மற்றும் வாடகைத் தாய் முறையில் முறைகேடுகள் போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் இன்னும் பலர் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர் . டாக்டர் நம்ரதா அனுமதிகள் 2020 ஆம் ஆண்டிலேயே மூடப்பட்டது அவர் கூறினார். மருத்துவமனை மூடப்படுவதாக அவர் கூறினார். எனவே அவருக்கு மூடுவதற்கான சான்றிதழையும் வழங்கியுள்ளோம். ஆனால் அவர்கள் டெஸ்ட் டியூப் பேபி மையத்தை சட்டவிரோதமாக நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்தி வரும் மையத்தில் ஒரு ஆபரேஷன் தியேட்டரைக் கண்டுபிடித்துள்ளோம். தெலுங்கானா மருத்துவ கவுன்சில் சான்றிதழ் காலாவதியாகிவிட்டாலும், மருத்துவமனை சட்டவிரோதமாக இயங்குகிறது. மயக்க மருந்து ஆய்வகம் உள்ளது, படுக்கைகள் உள்ளன, 7 வகையான பகுப்பாய்வு உபகரணங்கள் உள்ளன என்றார்.

ஐதராபாத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பணம் ஆசை காண்பித்து கருமுட்டை சேகரித்து அகமதாபாத்திற்கு அனுப்பி வந்த இந்தியன் ஸ்பெர்ம்டெக் கிளினிக்கில் 7 கைது செய்த போலீசார்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு
பணம் ஆசை காண்பித்து ஆண்களிடமிருந்து விந்தணுக்களையும் பெண்களிடமிருந்து கருமுட்டைகளையும் சேகரித்து அகமதாபாத்தில் உள்ள ஒரு கருமுட்டை மையத்திற்கு கொண்டு சென்ற கும்பலைச் சேர்ந்த ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தில் உள்ள ‘இந்தியன் ஸ்பெர்ம்டெக்’ என்ற பெயரில் நடத்தும் விந்தணு வங்கியின் இயந்திரங்கள் மற்றும் பதிவேடுகள் மற்றும் வாடகைத் தாய் விண்ணப்பங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக டிசிபி ரஷ்மி பெருமாள் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்தியன் ஸ்பெர்ம்டெக் கிரையோசிஸ்டம் கிளினிக் செகந்திராபாத் கிழக்கு மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள ப்ளூ சீ ஹோட்டலின் மேல் தளத்தில் அமைந்துள்ளது.
அதன் உரிமையாளர் பங்கஜ் சோனி சிலரை ஊழியர்கள், முகவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியமர்த்தியுள்ளார். அவர்களின் உதவியுடன், பண ஆசை காண்பித்து இளம் வயது கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விந்தணுக்கள் மற்றும் கருமுட்டைகளை சேகரிக்கிறார். சேகரிக்கப்பட்ட கருமுட்டைகள் மற்றும் விந்தணுக்கள் அகமதாபாத்தில் உள்ள ஒரு கருமுட்டை மையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. தேவையைப் பொறுத்து, விந்தணு மற்றும் கருமுட்டைகளை வழங்கும் நன்கொடையாளர்களுக்கு ₹ 1,000 முதல் ₹ 4,000 வரை பணம் வழங்கப்படுகிறது. இந்த சட்டவிரோத வணிகம் குறித்து நம்பகமான தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் சோதனை நடத்தி ஸ்பெர்ம்டெக் மேலாளர் பங்கஜ் சோனி, காசாளர் சம்பத், ஊழியர்கள் (முகவர்கள்) ஸ்ரீனு, ஜிதேந்தர் குமாவத், சிவா (தரகர்), மணிகாந்த (தரகர்) மற்றும் கன்சாரி பரோ (முட்டை தானம் செய்பவர்) ஆகியோரை கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.