பொள்ளாச்சி – வால்பாறை சாலை பகுதியில் தினசரி அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் அதிக அளவில் செல்கின்றன. கிராமப்புற பகுதிகளில் என்பதால் அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது.

இந்நிலையில் கொங்கலப்பம்பாளையம் பிரிவு பகுதியில் பொங்காளியூர் செல்லும் அரசு பேருந்து எண் (29)TN38N3551 வரும்பொழுது பேருந்தின் பின்புறம் உள்ள தானியங்கி கதவு எதிர்பாரா விதமாக சாலையில் கழன்று பறந்தது. இதில் சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அதிர்ந்து போன ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்தினர் சாலையில் கிடந்த கதவு எடுத்து தனியாக வைத்துவிட்டு சென்றனர்.

அரசு பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்து இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் இச் சம்பவம் நடைபெற்றது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.