மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக விளங்கும் கோவிலாகும்.அகோர மூர்த்தி சுவாமி மருத்துவசூரண் என்ற அசுரனை சிவபெருமான் தனது ஐந்து முகங்களில் ஒன்றான சத்தியோஜாதம் அகோர மூர்த்தியை மாசி மாதம் பிரதமை திதி ஞாயிற்றுக்கிழமை பூர நட்சத்திரத்தில் கூடிய நாளில் நெருப்பு பிழம்பாக உருவில் தோன்றினர் அதனை கண்டதும் மருத்துவ சூரண் சிவபெருமானிடம் சரணாகதி அடைந்தான் பின்பு மருத்துவசூரண் சிவபெருமானிடம் தான் கன்ட ரூபத்தில் திருவெண்காடு ஸ்தலித்தில் எழுருந்தளி பக்தர்களின் வேண்டுகோள் அனைத்தையும் நிறவேற்றிதர வேண்டுகோள் வைத்தார்.அதன்படி இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தந்து ஸ்ரீ அகர மூர்த்தி சுவாமி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
ஆடி மாத பூரத்தையோட்டி உற்சவர் அகோர மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. உற்சவர் அகோர மூர்த்தி சுவாமிக்கு அரிசி மாவு, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தேன், பஞ்சாமிர்தம், நாட்டு சக்கரை, பழச்சாறு, தயிர், பால் , பன்னீர், சந்தனம், உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் அகர மூர்த்திக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் ஓதப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அகோர மூர்த்தி பகவானை தரிசனம் செய்தனர்.