சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு – போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில்வே சாலையில் செயல்பட்டு வரும் ஹோட்டலில் நேற்றிரவு 2 பேர் சாப்பிட பார்சல் வாங்கியுள்ளனர். ஊழியர்கள் பார்சல் வாங்கியதிற்கு பணம் கேட்டுள்ளனர். அப்போது 2 பேரில் ஒருவர் திடீரென கத்தியை எடுத்து ஹோட்டல் தரையில் தீப்பொறி பறக்க உரசி பணம் தரமுடியாது என்று மிரட்டியது மட்டுமின்றி, அப்போது ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு நின்று கொண்டிருந்த சிந்தாமணி நகரைச் சேர்ந்த கணேஷ் பாண்டி என்ற இரும்பு கடை ஊழியர் மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து இருவரும் கலைந்து சென்றுள்ளனர் . இதில் காயமடைந்த கணேஷ் பாண்டி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஹோட்டலில் கத்தியை காட்டி தகராறு செய்து அடிதடியில் ஈடுபட்ட 2 பேரையும் தேடிவருகின்றனர். தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது