நாகை மாவட்டம் வேதாரண்யத்தில்
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் பழைய ஓய்வுதியத்தை அமுல்படுத்த கோரியும்,
அலுவலர் குழுவை திரும்ப பெற கோரியும்,தேர்தல் வாக்குறுதியின் போது கூறிய 309 ஐ நிறைவேற்ற கோரியும் கோரிக்கை அட்டை எண் அணிந்தும், கறுப்பு பேட்ஜ் அணிந்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், அரசு ஊழியர் ஒருங்கிணைப்பாளர்
ராமையன் , சிபிஎஸ் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தரவடிவேல், உள்ளிட்ட இயக்க பொறுப்பாளர்கள்
கலந்து கொண்டனர்.