திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சான்டெக்ஸ் நிறுவனத்தின் 2025-26 ஆண்டுக்கான டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சந்திப்பு கூட்டம் தனியார் ஹோட்டலில் இன்று நடந்தது. இது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், நாங்கள் 30 ஆண்டு காலமாக பின்னலாடைகளை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு ரோஸ்லி என்ற பெயரில் ஆடைகளை அறிமுகம் செய்துள்ளோம். ஆரம்ப காலகட்டத்தில் 5 டிஸ்ட்ரிபியூட்டர்களுடன் ஆரம்பித்த இந்த நிறுவனம் தற்பொழுது 5 மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட டிஸ்ட்ரிபியூட்டர்களுடன் செயல்பட்டு வருகிறது. மற்ற முன்னணி நிறுவனங்களின் பிராண்டுகளை விட விலை குறைவாகவும் தரம் அதிகமாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு அதை நோக்கி தான் தற்போது சென்று கொண்டிருக்கிறோம். அடுத்த இரண்டு ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் டிஸ்ட்ரிபியூட்டர்களை அமைத்து வளர்ச்சி பாதைக்கு செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. தற்பொழுது தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி சிறுவர் சிறுமிகளுக்கான ஆடைகளை சான்டெக்ஸ் கிட்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளோம். அதற்கான டிஸ்ட்ரிபியூட்டர்கள் சந்திப்பு தான் இன்று நடந்துள்ளது என தெரிவித்தார்.