கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் செயல்படும் 55 கள்ளர் சீரமைப்பு விடுதிகளை தமிழக அரசு சமூக நீதி விடுதி என பெயர் மாற்றம் செய்வதை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
தமிழ்நாடு அரசு கள்ளர் பள்ளிகளுக்கு எதிராக பிறப்பித்துள்ள அரசாணையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் மேலும் கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள இடைநிலைஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் சமையலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி குழந்தைகளுக்கு நேதாஜி, மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் வேடம் அணிந்து வந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் தமிழ்நாடு பசும்பொன் முக்குலத்தோர் தேவர் பேரவை சார்பில் மனு அளித்தனர்.