கோவையில் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை அரசு பள்ளிகளில் இருந்து வெளியேற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை கணபதி, ரத்தினபுரி அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி நோக்கில் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை டிசி கொடுத்து அனுப்புகின்றனர்.

இது இடைநிற்றலை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என கூறியும், கட்டாயமாக பள்ளியில் இருந்து வெளியேற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.