தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பள்ளி பேருந்து ஒரு வழிப்பாதையிலிருந்து திருநெல்வேலி சாலைக்கு திரும்பும்போது வாகனத்தின் பின் சக்கரம் கழிவுநீர் கால்வாயில் சிக்கியது.

உடனடியாக பள்ளி மாணவ மாணவிகள் இறக்கி விடப்பட்டு வேறொரு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தனியார் பள்ளி வாகனம் கால்வாயில் சிக்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.