செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் செய்யூர் தாலுகாவில் உள்ள பழங்குடி இருளர் மக்களுக்கு நீண்ட காலமாக சுமார் 250 குடும்பத்தினருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படாமல் உள்ளதை கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மதுராந்தகம் பஜார் வீதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் இன மக்கள் ஊர்வலமாக வந்து மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உடனடியாக பழங்குடி இருளர் இன மக்களுக்கு தமிழக முதலமைச்சர் இப்ப பகுதிக்கு வருகை தரும் பொழுது அவர்களிடம் முறையிட்ட பொழுது மூன்று மாத காலத்திற்குள் உங்களுக்கு பக்கா வழங்க ஆவணம் செய்யப்படும் என அறிவித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் அப்படி இருந்தும் பட்டா வழங்க வில்லை எனவும் உடனடியாக பட்டா மற்றும் இலவச வீடு வழங்க வேண்டுமென வருவாய் கோட்டாட்சியர் இடம் மனு வழங்கினர்.