கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூன்று பேரும் நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றதாகவும் அப்போது மது போதையில்மான் என நினைத்து துப்பாக்கியால் சுட்ட போது உடன் வந்த சஞ்சித் என்பவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்ததாககைது செய்யப்பட்ட உறவினர்கள் வாக்குமூலம்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள காரமடையில் இருந்து பில்லூர் அணைக்குச் செல்லும் வழியில் உள்ள அத்திக்கடவு அருகே உள்ள சொரண்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் வயது 45 கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை கிளையில் ஓட்டுனராக கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.மனைவி சித்ரா . இவர்களுக்கு இரண்டு மகன்கள்.மூத்த மகன் சஞ்சய் இளைய மகன் சஞ்சித்.வயது 23.இவரது மகன்கள் இரண்டு பேரும் பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர் .
