வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த பொய்கை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காலை சென்னையில் இருந்து பெங்களூருக்கு கன்டெய்னர் லாரியில் விலை உயர்ந்த கார்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது லாரியின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் கண்டெய்னர் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த நிலையில்.கண்டெய்னர் லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தி விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் லாரி நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்த உயர்மின் அழுத்த மின்சார ஒயர்கள் உரசி லாரி தீப்பிடித்து எரிந்தது மேலும் லாரியில் இருந்த விலை உயர்ந்த இரண்டு டொயோட்டோ கார்கள் தீயில் கருகி நாசமானதுசம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முறை சொல் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இந்த சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்