தேனி மாவட்டத்தில் கம்பம் கூடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் மற்றும் சுருளி வனப்பகுதியான மேகமலை, ஹைவேவிஸ் , இரவங்கலாறு போன்ற பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.இந்த கனமழையின் காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜூன் 26 ஆம் தேதி அன்று சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து வனத்துறையினர் அருவியல் குளிப்பதற்கு நேற்று நேற்று முன் தினமும் தடை விதித்தது இருந்தனர்.இந்த நிலையில் இன்று சுருளி வனப்பகுதியில் மழை அளவு குறைந்து அருவியல் நீர்வரத்து சீரானவை தொடர்ந்து இன்று காலை முதல் அருவியல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதித்துள்ளனர்.
