முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது.இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக ஆழியாறு அணை நிரம்பும் நிலையை எட்டி உள்ளது.
120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் இன்று காலை 7:00 மணி நிலவரப்படி 110.70 அடியை எட்டி உள்ளது அணைக்கு வினாடிக்கு 1,861 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 161 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறதுஆழியார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அணை கரையோரம் உள்ள மக்கள், அணை பகுதியை ஒட்டி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும், துணி துவைக்கவும், குளிக்கவும்,அல்லது மற்ற பிற தேவைகளுக்காக ஆற்றப்படுகைக்கு செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
