புகார் அளித்த அதிமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ரேசன் கடை பணியாளர்கள் மீது புகார்துறைசார்ந்த அதிகாரிகள், தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கைதொலைபேசியில் மிரட்டல் விடுத்த ஆடியோவும் வெளியாகி பரபரப்புதேனிமாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஜக்கம்பட்டி பகுதியில் 3 ரேசன் கடைகள் செயல்பட்டு வருகிறது.
இவற்றின் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் சமீபகாலமாக 3 ரேசன் கடைகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரேசன் கடைகளில் இருந்து கூடுதல் விலைக்கு ரேசன் அரிசிகள் மூட்டைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும்,பொருட்கள் வழங்குவதில் எடை குறைவு , முறையாக கடைகளை திறக்காதது , பாமாயில் விற்பனை செய்யாதது , உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன என்றும்
இது குறித்து இப்பகுதியை சேர்ந்த இரண்டாவது வார்டு அதிமுக நிர்வாகி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்
மேலும் இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளார்ஆனால் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டும் நபர் மாறாக புகார் அளித்த தனக்கு ரேஷன் கடைக்காரர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும்
குறிப்பாக ரேசன் கடை எண் 3ல் பணிபுரியும் ரேசன் கடை விற்பனையாளர் சுப்புலட்சுமி மற்றும் அவரது கணவர் தொலைபேசியில் எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இதனால் மற்ற பொதுமக்கள் ரேஷன் கடைக்காரர்கள் மீது புகார் அளிக்க அச்சப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தனக்கு கொலை மிரட்டல் விடுத்து முறைகேட்டில் ஈடுபட்டு வரும் ரேஷன் கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இரண்டாவது வார்டு அதிமுக நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக நிர்வாகிக்கு ரேசன் கடை பணியாளர்கள் மிரட்டல் விடுத்த ஆடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது .
இதுகுறித்து ஆண்டிபட்டி வட்ட வழங்கல் அலுவலரிடம் கேட்டபோது இந்தக் கடைகள் தொடர்பாக தொடர்ச்சியான புகார்கள் வரும் நிலையில் நடவடிக்கையும் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்