திருப்பூர் – குமரானந்தபுரத்தி்ல் வசித்து வருபவர் பாலமுருகன். இவர் சிவன் தியேட்டர் அருகில் நண்பர்களுடன் இணைந்து நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் இந்து முன்னணியில் வடக்கு ஒன்றிய தலைவராக உள்ளார். இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை பாலமுருகன் அவரது வீட்டின் அருகே மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நேற்றிரவு நண்பர்களுடன் பேசிவிட்டு வீட்டுக்கு திரும்பும் பொழுது இக்கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவர் இந்து முன்னணி நிர்வாகி என்பதால் பரபரப்பு நிலவி வருகிறது.