மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் அடுத்த வெள்ளிவாயல் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி 64. இவர் விச்சூர் பகுதியில் உள்ள சிக்கோ தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 14ஆம் தேதி தொழிற்சாலையில் பணியில் இருந்த போது இரும்பு கேட்டை காவலாளி குமாரசாமி மூடிய போது எதிர்பாராத விதமாக கேட்ஸ் சரிந்து காவலாளி மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த காவலாளி குமாரசாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் காவலாளி குமாரசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மணலி புதுநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இரும்பு கேட் காவலாளி மீது சரிந்து விழும் அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.