பணி மாறுதலை ரத்து செய்ய வலியுறுத்தி தொடக்கபள்ளி ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை வட்டாரத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணி மாறுதல் கேட்டு பல ஆண்டுகளாக காத்திருந்து வருவதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் முறைகேடாக சில ஆசிரியர்களுக்கு மட்டும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, எனவே முறைகேடாக வழங்கப்பட்ட பணி மாறுதல்களை ரத்து செய்ய வலியுறுத்தி பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் முறைகேடாக பணி மாறுதல் வழங்கப்பட்டதை கண்டித்தும், இந்த மாறுதல்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டனu கோஷங்கள் எழுப்பினர்.பல வருடங்களாக பணி மாறுதலுக்காக கோரிக்கை விடுத்து காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாகவும், எனவே முறைகேடாக வழங்கப்பட்டுள்ள பணிமாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
