திருப்பூர் அருகே பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி உயில் மூலம் மோசடி செய்து மகன் வழி பேத்திகள் சொத்தை அபகரிக்க முயல்வதாக கண்ணீருடன் மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக் கிணறு பகுதியில் வசித்து வருபவர் பாக்கியம்,
இவரது கணவர் வேதமுத்து , இவர்களுக்கு சொந்தமான ஏழரை சென்ட் நிலம் உள்ளது ,வேதமுத்து தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்துள்ளார், இவருக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 2003 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்,
பாக்கியம் -வேதமுத்து தம்பதியினருக்கு அய்யாவு , செல்வி என ஒரு மகனும், மகளும் உள்ளனர்,
கணவரின் இறப்புக்குப் பின்னர் கிடைத்த ஓய்வு தொகையை வைத்துக் கொண்டும்,தனது சேமிப்பு பணத்தைக் கொண்டும் வீடு கட்டி வசித்து வந்துள்ளனர்,
இவரது மகன் அய்யாவு காவல்துறையில் பணியாற்றி வந்துள்ளார், மகனுக்கு ஜெயலட்சுமி என்பவருடன் திருமணம் நடைபெற்று 3 பெண் குழந்தைகள் உள்ளனர்,
இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிரிந்து சென்றுவிட்டார், அய்யாவு தாயுடன் வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில் மன விரத்தியில் இருந்த அய்யாவுகாவல்துறையில் பணிகளை சரிவர செய்யாமல் இருந்ததால் கேன்சர் நோய் பாதிக்கப்பட்டு கடந்த வருடம் மகன் அய்யாவு உயிரிழந்தார்,
கணவர் பென்ஷன் தொகையுடன், மகன் தொகையையும் வைத்துக்கொண்டு மருத்துவ செலவுகளை பார்த்து வந்துள்ளார் தாய் பாக்கியம்,இந்த நிலையில் மகள் செல்வியிடம் பெற்ற தொகை 2.16 லட்சத்திற்கு மூன்றில் ஒரு பங்கை எழுதிக் கொடுத்துள்ளார் தாய் பாக்கியம்,
இதனிடையே
மோசடியாக போலியான உயில் மூலம் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் மகன் வழி பேத்திகள் 3 பேர் (கார்த்திகா சிவரஞ்சனி அகல்யா ) பல்லடம் சார்பு நீதிமன்றத்தில் தனது தந்தையின் பெயரில் உயில் உள்ளது எனக் பொய்யாக கூறி இந்த சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் வழக்கு பதிவு செய்துள்ளனர்,
மூதாட்டி பாக்கியம் வயதான இந்த காலத்தில் தனக்கு சர்க்கரை நோய், பிரஷர் உள்ளதால் நடக்க முடியாத நிலையில் இருக்கும் தன்னை காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலை கலைக்கும் நோக்கில் பொய்யான உயிலை வைத்து உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வேதனை அடைய செய்கின்றனர் மகன் வழி பேத்திகள்,
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நல்ல தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என கூறி தாய் பாக்கியம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்.செய்தியாளர்களிடம் கண்ணீருடன் தெரிவித்த மூதாட்டி பாக்கியம் கூறியதாவது.எனது மகனும், மகன் வழி பேத்திகளும் தன்னிடம் பலமுறை வெற்று காகிதத்தில் கைரேகை பதிவு செய்து வாங்கி வைத்துள்ளனர், அதனை தவறாக பயன்படுத்தி சொத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனர், அதனை அவர்களிடமிருந்து பெற்று தர வேண்டும், மகள் செல்வியை எந்த விதத்திலும் அவர்கள் துன்புறுத்தி விடக்கூடாது என்றும் கண்ணீருடன் தெரிவித்தார்.
