சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டியில் உள்ள மட்டிக்கண்மாயில் இன்று காலை பாரம்பரிய மீன் பிடி திருவிழா நடைபெற்றது இதில் பிரான்மலை, அரளிபட்டி, வேங்கை பட்டி, சிங்கம்புனரி போன்ற ஊர்களில் இருந்தும் மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க மடைக்கு மாலை அணிவித்து சாமி கும்பிட்ட பின் வெடி வெடித்து கிராம முக்கியஸ்தர்கள் மீன் பிடிக்க அனுமதி வழங்கினர்
மீன் பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் மின்னல் வேகத்தில் ஓடி கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர் தாங்கள் கொண்டு வந்திருந்த கொசுவலை, மீன் பிடி வலை , அரி கூடை , கச்சா உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் கெண்டை, ஜிலேபி, அயிரை, விரா ,உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை குடும்பத்துடன் வருகை தந்து மகிழ்ச்சியுடன் பிடித்து கொண்டு சென்றனர் ,
திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்கள் தோறும் மீன்பிடி திருவிழா நடைபெற்றால் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் தொண்டு தொட்டு கிராமங்கள் தோறும் மீன்பிடி திருவிழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது
