திருவாலங்காடு அருகே காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் ஒரு கார் பறிமுதல் செய்து வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் 3 பேரை திருவாலங்காடு போலீசார் தேடி வருகின்றனர்சிறுவன் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு உடன் தொடர்பில் இருந்த மூன்று நபரை திருவாலங்காடு போலீசார் விசாரணை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகன் தனுஷ், 23. இவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ, 21, என்பவரை, சமூக வலைதளம் வாயிலாக காதலித்து, பதிவு திருமணம் செய்தார்.இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், விஜயஸ்ரீயின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.காதல் விவகாரம் தொடர்பாக, விஜயஸ்ரீயின் தந்தை வனராஜ், 55, சென்னை பூந்தமல்லி ஆண்டர்சன்பேட்டையைச் சேர்ந்த, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெகன்மூர்த்தி உதவியை நாடியதாக கூறப்படுகிறது.அவரது ஆலோசனையின்படி, ஐ.பி.எஸ்., அதிகாரியான கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம் அரசு காரில், தனுஷின் தம்பியான, இந்திரசந்த் 17 வயது சிறுவனை
கடந்த ஏழாம் தேதி அதிகாலை கடத்தி மீண்டும் வீட்டின் அருகே இறக்கி விட்டுள்ளனர்.இதுகுறித்து சிறுவனின் தாய் லட்சுமி அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் கடத்தலில் தொடர்புடையதாக 5 கார்கள் மீது வழக்கு பதிவு செய்து.
சிறுவனை கடத்திய பெண்ணின் தந்தை வனராஜ் மற்றும் கணேசன் ,மணிகண்டன், மகேஷ்வரி, சரத்குமார் உட்பட 5 பேரை சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பூவை ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் இடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று கார்கள் கடந்த 11ம் தேதி பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் சிறுவனை காரில் கடத்திய
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த இருளஞ்சேரி பகுதியைச் சேர்ந்த
சேர்ந்த புரட்சி பாரத கட்சியின் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் ஸ்வீட் குமார் 31 என்பவர் கர்நாடக பதிவு எண் கொண்ட டொயோட்டா கிளாசா காரை மதியம் திருவாலங்காடு போலீசார் ஸ்வீட் குமாரின் நண்பரான அரக்கோணம் தாலுகா தக்கோலம் அடுத்த உரியூர் பகுதியை சேர்ந்த செந்தில் 35, என்பவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்தனர் .
தலைமறைவாக உள்ள ஸ்வீட் குமாரை கைது செய்வதற்காக அவனின் நண்பர்களான உறையூர் செந்தில் -36 விக்கி -26 மாந்தோப்பு தஸ்ரதன் -32 இன்று காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு அனுப்பி வைத்தனர்
மேலும் இந்த வழக்கில் ஸ்வீட் குமார்
டேவிட் ,வேதா மூன்று பேரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது,
நான்கு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுவனை கடத்த ஏடிஜிபி பயன்படுத்தப்பட்டு வந்த அரசு காரை இன்னும் போலீசார் பறிமுதல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,
