மலேசியா நாட்டிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.85 லட்சம் மதிப்புடைய, 900 கிராம் தங்க போல்ட், நட்டுகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.தங்க போல்ட்கள் வெளியே தெரியாமல் இருக்க, கிரே கலர் பெயிண்ட் அடித்து, நூதன முறையில், தங்கம் கடத்தி வந்த, சென்னையைச் சேர்ந்த பயனியை, சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை.சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த 30 வயது ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவருடைய உடைமைகளை சோதித்தனர்.அப்போது உடைமைகளில்,99 தங்கத்தில் ஆன போல்ட், நட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அது தங்க போல்ட், நட்டு என்று வெளியில் தெரியாமல் இருப்பதற்காக, கிரே கலர் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. அந்த 99 தங்க போல்ட், நட்டுகளின் மொத்த எடை சுமார் 900 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூ.85 லட்சம். இதை அடுத்து அந்த தங்க போல்ட் நட்டுகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடத்தல் பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.