திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டிப்பாளையம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நியாயவிலை கட்டிடம் கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். சுமார் 2 கிமீ சென்று அரசின் பொது விநியோக திட்ட பொருட்களை வாங்கிட சிரமத்தை சந்தித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து தங்களது குடியிருப்பு பகுதியில் புதிய நியாய விலை கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் 18.1 லட்சம் மதிப்பீட்டு புதியதாக நியாய விலை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாயவிலைக்கடையினை பொன்னேரி ச…
தேசிய திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவியை விமானத்தில் வந்தே பாரத் ரயிலிலும் அழைத்து சென்று மகிழ்வித்த தலைமை ஆசிரியை.எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு தேசிய திறனறிவு தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றதுஇந்தாண்டு தேர்வை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.அதில் வானவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 25 பேர் தேர்வு எழுதியதில் மாணவி ஷர்மிளா தேர்ச்சி பெற்றார்.தலைமை ஆசிரியர் அமுதா தேசிய திறனறிவு தேர்வில் வெற்றி பெற்றால் விமானம் மற்றும் ரயிலில் அழைத்துச் செல்வதாக உறுதியளித்து மாணவர்களை ஊக்கப்படுத்தி இருந்தார். .
அதன்படி வெற்றி பெற்ற மாணவி ஷர்மிளாவை கடந்த 14 ம் தேதி அன்று திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்திலும் சென்னையிலிருந்து விழுப்புரத்திற்கு வந்தே பாரத் ரயிலிலும் அழைத்துச் சென்று மாணவியை மகிழ்வித்தார்இதுபோல் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பாகவும் சில மாணவர்களை இதே தலைமை ஆசிரியர் விமானத்தில் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
