கேரளாவில் தீவிரமாக பெய்து வரும் பருவமழை கண்ணூர் காசர்கோடு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளது தொடரும் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுகேரளாவில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது இன்றைய தினம் அதிதீவிர மழை என்னும் ரெட் அலர்ட் எந்த மாவட்டத்திற்கும் விடுக்கப்படவில்லை கண்ணூர் காசர்கோடு மாவட்டங்களில் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதுஅதே சமயம் மாநிலத்தில் பல மாவட்டங்களில் 50 முதல் 60 கிலோ மீட்டர் தூரம் காற்று வீச கூடும் என்றும் இதனால் கடல் அலைகள் நாலு மீட்டர் அளவுக்கு உயரக்கூடும் என்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் மக்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுதொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கண்ணூர் காசர்கோடு பகுதிகளில் உள்ள ஆறுகள் கரை கவிழ்ந்து தாழ்வான பகுதிகளுக்களில் உள்ள வீடுகளுக்கு வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது இதை போல் சில இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடல் நீரும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.