பருவ மழையால் மொச்சை விவசாயம் செழிப்படைந்துள்ளது.தேனி மாவட்டத்தில்,
கம்பம், கூடலூர், உத்தமபாளையம், , அனுமந்தன்பட்டி, கோம்பை போன்ற பல பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மழையினை மட்டும் நம்பி மொச்சை, கடலை, சோளம், எள், சூரியகாந்தி போன்ற மானாவாரி விவசாயங்கள் நடைபெறுகின்றது.தற்பொழுது கம்பம் பகுதியில் மானவாரியாக மொச்சைக்காய விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
மொச்சைக்காய் விவசாயத்திற்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக பெய்து மற்றும் வரும் பருவ மழையின் காரணமாக மொச்சை விவசாயம் மிகவும் செழிப்படைந்துள்ளது.
. தற்பொழுது மொச்சைச்சாய செடிகளில் வெள்ளை நிறத்தில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. செடிகளில் பூக்கள் பூத்து குலுக்குவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.மேலும் இந்த மழையின் காரணமாக இந்த ஆண்டு மொச்சைக்காய் விளைச்சல் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
