தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தை போற்றும் வகையில், தூத்துக்குடியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி முன்னெடுப்பில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா 2025 13ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. நிறைவு நாளான இன்று தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளி – மங்கல இசை மற்றும் நடனம், நெய்தல் கலைக்குழு – பல்வகை நாட்டுப்புற இசை
கலைவாணர் பெருமுரசு கலைக்குழு, அந்தியூர் – பெருமுரசாட்டம் ,
உவரி களியல் கலைக்குழு, தூத்துக்குடி களியல் ,உருபாணர் – பண்டைய நாட்டுப்புற இசைக்கருவிகள் இசைக்குழு ,நாட்டுப்புற பாடகர் மார்லி அந்தோணியின் நிகழ்ச்சி – நாட்டுப்புற அந்தோணிதாசனின் கிராமிய பாடல்களும் நடைபெற்றது இந்த கலை விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகமடைந்தனர் மேலும் பாடல் கேட்க நடனமாடி கலைஞர்களை உற்சாகப்படுத்தியவர்கள் இங்கு நடைபெற்ற அனைத்து கலை நிகழ்ச்சிகளையும் பார்த்து மகிழ்ந்தனர்

இந்த நெய்தல் கலை விழா தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
இந்த விழாவில் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பலா மேளம், பொய்க்கால் குதிரை போன்ற 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது

இதுபோல் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்தும் விதமாக உணவு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் மற்றும் நபார்டு சார்பில் 30-க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து கலைகளையும் ஒரே இடத்தில் காணும் வகையில் இந்த கலைத் திருவிழா நடைபெற்று வருகிறது

இந்த நெய்தல் கலை விழாவின் நிறைவு நாளான இன்று திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தமிழக மகளிர் ஆணைய தலைவர் குமரி விஜயகுமார், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அப்துல் வகாப்,ராஜா தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் இந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கலைத் திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் தங்களின் தலை திறமையை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்தனர் அதுமட்டுமின்றி பாரம்பரிய உணவு உணவு திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது இதிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உணவுகளை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்