யானை நடமாட்டம் அதிகம் உள்ள ஆழியார் – வால்பாறை பாதையில் செல்லும் அரசு பேருந்து நிற்காததால் பொதுமக்கள் வேதனை பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கோவை, திருச்சி,மதுரை போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கும், பொள்ளாச்சியில் உள்ள கிளை கிராமங்களுக்கும் தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலரும் பேருந்து பயணத்தை நம்பி உள்ளனர்.

வால்பாறை வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை என்பதாலும் ,யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் ஆழியார் – வால்பாறை சாலையில் அதிக அளவில் இருப்பதாலும் பொதுமக்கள் வால்பாறைக்கு செல்ல, பெரிதும் அரசு பொது பேருந்து போக்குவரத்தையே நம்பி உள்ளனர்.இந்நிலையில் இன்று மதியம் 12:45 மணி அளவில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை நோக்கி சென்ற அரசு பேருந்து அங்குலக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக தெரிகிறது.சுமார் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தை நிறுத்த சொல்லி கையால் சைகை காட்டியும், அதனை பொருட்படுத்தாத அரசு பேருந்து ஓட்டுனர் நிற்காமல் பேருந்தை தொடர்ந்து இயக்கியதாக கூறப்படுகிறது.இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.அங்கலக்குறிச்சி வழியாக போக்குவரத்தில் செயல்படும் அனைத்து பேருந்துகளும் அங்கலக்குறிச்சி டெர்மினல் பகுதியில் பயணிகளை ஏற்றி -இறக்கிச் செல்லும் பொழுது,குறிப்பிட்ட அரசு பேருந்து மட்டும் நிற்காமல் சென்றது.வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களை அலட்சியப்படுத்தியவாறு அரசு பேருந்து சென்றது பயணிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியது.பேருந்து பயணிகளை அலட்சியப்படுத்திய பேருந்து ஊழியர்களை விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் நெய்தல் கலை திருவிழா-ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கிராமிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து பாரம்பரிய உணவுகளை உண்டு ரசித்தனர்

தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தை போற்றும் வகையில், தூத்துக்குடியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி முன்னெடுப்பில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா 2025 13ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. நிறைவு நாளான இன்று தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளி – மங்கல இசை மற்றும் நடனம், நெய்தல் கலைக்குழு – பல்வகை நாட்டுப்புற இசை
கலைவாணர் பெருமுரசு கலைக்குழு, அந்தியூர் – பெருமுரசாட்டம் ,
உவரி களியல் கலைக்குழு, தூத்துக்குடி களியல் ,உருபாணர் – பண்டைய நாட்டுப்புற இசைக்கருவிகள் இசைக்குழு ,நாட்டுப்புற பாடகர் மார்லி அந்தோணியின் நிகழ்ச்சி – நாட்டுப்புற அந்தோணிதாசனின் கிராமிய பாடல்களும் நடைபெற்றது இந்த கலை விழாவில்