ஆந்திர எல்லையில் தமிழக மாங்காய் ஏற்றி வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தியதை கண்டித்து, ஆந்திர அரசு போல் தமிழக அரசும் மாங்காய்க்கு டன் ஒன்றுக்கு நான்கு ஆயிரம் ரூபாய் மானியத்தை வழங்கக்கோரியும் ஆதார விலையாக டன் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கக்கூய நிலையில்தமிழக ஆந்திர எல்லைப் பகுதியான குடியாத்தம் அடுத்து பரதராமியில் டிராக்டரில் மாங்காயைக் கொண்டு வந்து சாலையில் கொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட மா விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தற்போது சித்தூர் செல்லும் சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மாங்காய் டிராக்டர் ஓட்டி வந்த ஓட்டுனரை கைது செய்து தற்போது காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலையில் மாங்காய்களை கொட்டி விவசாயிகள், தர்ணா போராட்டம்
